தமிழ் சினிமாவின் காஸ்ட்லி ஜெராக்ஸ் மெஷின் என்ற பெயர் எடுத்துவிட்டார் இயக்குநர் அட்லீ. அவரது முதல் படமான ‘ராஜ ராணி’ அப்படியே ‘மெளன ராகம்’  படத்தின் ஜெராக்ஸ் காப்பி. அடுத்த படமான ‘தெறி’யோ விஜயகாந்தின்  ‘ஆனஸ்ட் ராஜ்’ படத்தின் பக்கா தழுவல். மூன்றாவது படமான ‘மெர்சல்’  படமோ சூப்பர் ஸ்டாரின் மூன்று முகம் மற்றும் உலக நாயகனின் ஆபூர்வ ராகங்கள் இரண்டு படத்தையும் ஒன்றாக கலந்து கட்டி செய்த கலவை என்று கழுவி ஊத்தாதவர்கள் இல்லை. 

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

இதை எல்லாம் காதில் வாங்காத தளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லீயுடன் கூட்டணி வைத்தார். கடந்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வந்த பிகில் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. ஆனால் "பிகில்" படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே அந்த சீன் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிச்சது, இந்த சீன் வைரல் வீடியோவை பார்த்து சுட்டதுன்னு நெட்டிசன்கள் மரண பங்கம் செய்து வருகின்றனர். குறிப்பாக தொலைக்காட்சி இன்டர்வியூ ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசிய வசனத்தை, விஜய்யின் மாஸ் டைலாக்காக மாற்றியதாக வெளியான வீடியோ, விஜய் ரசிகர்களை கொலை வெறியாக்கியது. 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

இதையடுத்து பிகில் பட காப்பி பேஸ்ட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருந்த ஃபைவ் ஸ்டார் நிறுவனம், அட்லீ அப்பட்டமாக காப்பி அடித்திருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்குமாறு தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் அட்லீக்கு நோட்டீஸ் அனுப்பியது. கூடவே ரீமேக் இயக்குநர்கள் மத்தியில் ஃப்ரீ மேக் இயக்குநராக அட்லீ வலம் வருவதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இதையும் படிங்க: நயன்தாரா அம்மாவை பங்கம் செய்த நெட்டிசன்... மாமியாருக்கு சப்போர்ட்டாக மருமகன் விக்கி போட்ட கமெண்ட்...!

நோட்டீஸ் அனுப்பி பல மாதங்கள் ஆன பிறகும் அட்லீ இதுவரை எந்தவிதமான பதிலையும் கொடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான தயாரிப்பாளர்களில் பலரும் இனி அட்லீயை வைத்து எந்த படத்தையும் இயக்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரி... சரி... அட்லீ தான் சொந்தமாக புரோடக்‌ஷன் கம்பெனி ஆரம்பிச்சி படம் தயாரிக்கிறாரே அப்புறம் எதுக்கு இவங்க தயவு என்று நினைத்துவிட்டார் போலும்...!