No one can do anything if he comes to politics at the age of 70 - Vijays father
70 வயதிலும், 80 வயதிலும், அரசியலுக்கு வந்தால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளது ரஜினியின் அரசியலை நுழைவை மறைமுகமாக விமர்சிக்கிறார் போலும்.
விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து அவருக்கு, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
அவரது மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல், வருங்கால முதல்வர் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எஸ்.வி.சேகர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்த அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “மக்கள் தங்களை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதாக நினைக்கக் கூடாது. தங்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரனை தேர்ந்தெடுப்பதாக நினைக்க வேண்டும்” என்றும் இப்போது இன்னொரு காந்தி பிறக்க வேண்டும். ஆம், இளைஞர்களிடமிருந்து இன்னொரு காந்தி அரசியலுக்கு வரவேண்டும். 70 வயதிலும், 80 வயதிலும், அரசியலுக்கு வந்தால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய், ஏழை விவசாயிகள் பற்றி பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
