no cut in censor for balloon movie

ஒரு திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்றாப்போல் எடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து, அந்த படத்தின் ரிலீசுக்கு பச்சை கொடி காட்டுவது சென்சார் குழுவினர் தான். 

அவர்களிடம் எந்தவித கட்டும் இல்லாமல் ஒரு படம் சான்றிதழ் பெறுவது தான் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு பெரும் பலம் சேர்க்கும். 

இந்நிலையில் ரசிகர்கள் பலர் பல நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம் 'பலூன்' இந்த படத்தில் 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய் மற்றும் அஞ்சலி இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஜனனி ஐயர் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சினிஷ் இயக்க '70mm Entertainment' நிறுவனம் தயாரித்துள்ளது . யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த படத்தை சென்சார் குழுவின் சான்றிதழ் பெறுவதற்கு அனுப்பிவைத்த படகுவினார்க்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் 'பலூன்' படத்தில் எந்தவித கட்டும் இன்றி U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர் சென்சார் குழுவினர். 

இது குறித்து இயக்குனர் சினிஷ் பேசுகையில், '' அருமையாக வந்துள்ள இப்படத்தை எந்தவித கட்டும் இன்றி வெளிகொண்டு வருவதில் ஆவலோடு இருந்தேன். படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் சம்பந்தம் இருப்பதால் எந்தவித கட்டும் இல்லாமல் படத்தை வெளிகொண்டு வருவதில் முனைப்போடு இருந்தேன். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் எந்தவித கட்டும் இன்றி U/A சான்றிதழ் வழங்கினர். எல்லா வேலைகளும் முடிந்து 'பலூன்' ரிலீசுக்கு தயாராக உள்ளது என்றும் மிக விரைவில் படம் ரிலீஸ் செய்யப்படும் ''. என்றும் கூறியுள்ளார்.