நடிகர் நிவின்பாலி ‘கைரளி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்தில் ‘சார்லி’, ‘என்னு நின்டே மொய்தீன்’, ‘திரா’ ஆகிய மலையாளப் படங்களுக்கும் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவான ‘கோல்மால் 4’ என்ற இந்திப் படத்துக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜோமோன் டி.ஜான்.

தற்போது அவர் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் முதன்முறையாக இயக்கப் போகும் மலையாளப் படம், ‘கைரளி’.

1979-ல் மர்மமான முறையில் மாயமான, 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் எம்.வி.கைரளி பற்றிய கதையுடன் இந்தப் படம் உருவாகிறது.

இந்தப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். சித்தார்த்தா சிவா திரைக்கதை எழுதுகிறார். படத்தை நிவின் பாலியே தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் கேரளா, கோவா, டெல்லி, குவைத், ஜெர்மனி மற்றும் ஜிபோட்டியில் நடைபெறவுள்ளது.

உண்மைக் கதையை தழுவி அதுவும் தன் மாநிலத்தில் புகழ்பெற்ற கப்பல் பற்றி இந்த கதை இருப்பதால் இப்போதே கேரள மக்களிடம் இந்தப் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு தொற்றிக் கொண்டது.