Nivin palli with Tiger Murugan director Double treat ...
நடிகர் நிவின்பாலி, ‘புலி முருகன்’ படத்தை இயக்கிய இயக்குனர் வைசாக் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தாமாகிவுள்ளார்.
இயக்குனர் வைசாக் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ‘புலி முருகன்’. இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.
அடுத்ததாக இயக்குனர் வைசாக், மம்முட்டியை வைத்து ஏற்கனவே இயக்கிய ‘போக்கிரி ராஜா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘ராஜா-2’வை இயக்குவதாக இருந்தார். ஆனால், அந்தப் படத்திற்கு ம்மமுட்டியின் கால்ஷீட்டும், பிருத்விராஜின் கால்ஷீட்டும் ஒத்துப் போகாததால் படம் இயக்க தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில் அதற்குள் இன்னொரு படத்தை இயக்கிவிடலாம் என முடிவு செய்துள்ளார் இயக்குனர் வைசாக்.
ஆம். தனது அடுத்தப் படத்தை நிவின்பாலியை வைத்து இயக்கவுள்ளாராம்.
இந்தத் தகவலை வைசாக்கின் கதாசிரியர் உதயகிருஷ்ணா உறுதிப்படுத்தியுள்ளார்.
