ஒருநாள் கூத்து திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மதுரை பொண்ணு நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படத்தை தொடர்ந்து உதயநிதிக்கு ஜோடியாக 'பொதுவாக எம்மனசு தாகம்' படத்தில் நடித்தார்.

தமிழ் மட்டும் இன்றி தற்போது தெலுங்கு திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவர் நடிகர் ஜெயம் ரவியுடன்  நடித்துள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெளியாக உள்ளது.

நிர்வாண வீடியோ சர்ச்சை:

இந்நிலையில் கடந்த ஆண்டு கோலிவுட் திரையுலகத்தை அதிரவைத்த 'சுசி லீக்சில்' இந்த நடிகையும் சிக்கினார். நிவேதா பெத்துராஜ் நிர்வாணமாக இருப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி இவருடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலியல் தொந்தரவு:

தற்போது இவர் ஒரு செல்பி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் உங்கள் குழந்தைகளை கவனமாக பார்துக்கொள்ளுங்கள், குழந்தையாக இருக்கும் போது பலர் பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக நான்... என கூறியள்ளார்.

இப்படி குழந்தைகளிடம் அவர்கள் தவறாக நடந்துக்கொள்ளும் போது... அது சரியா, தவறா, என்ன நடக்கிறது என்று குழந்தைகளுக்கு ஒன்றும் தெரிவதில்லை. இதனால் குழந்தைகளின் மீதான பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கிறது என்றும் இது பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களால் தான் நேர்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஆஷிபா:

மேலும் சமீபத்தில் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, துடிக்க துடிக்க கொலைசெய்யப்பட்ட 8 வயது குழந்தை ஆசிபாவை மனதில் கொண்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் நிவேதா பெத்துராஜ்.