'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்தார்.

இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. 

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. கடைசியாக தமிழில் வெளியான சங்கத்தமிழன் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும் மனம் தளராத நிவேதா பெத்துராஜ், எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு உள்ளார். 

இதனால், அடிக்கடி தனது விதவிதமான புதிய புகைப்படங்களை, தனக்கு வேண்டியர்கள் மூலம் சமூக வலைதளங்களில் பரவவிட்டு வருகிறார். 
அந்த வகையில், ஹோம்லி லுக்கில் இருக்கும் நிவேதா பெத்துராஜின் புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கண்களை கவரும் பட்டுப்புடவையில் கொள்ளை கொள்ளும் பேரழகில் நிவேதா பெத்துராஜ் வசீகரிக்கும் இந்த புகைப்படங்கள்,ரசிகர்களை அசரடித்து வருகின்றன. இவ்வளவு அழகை எங்கு மறைத்து வைத்திருந்தார் என ஆச்சரியப்படும் அளவுக்கு இளசுகளை காதல் வசியம் செய்துள்ள அவருக்கு, தங்களது இதயங்களை லைக்குகளாக அள்ளி தந்து வருகின்றனர் ரசிகர்கள்.

தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. 

இதில், 'பொன் மாணிக்கவேல்' படம், வரும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் நிவேதா பெத்துராஜுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.