கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மதுரை பொண்ணு நிவேதா பெத்து ராஜ். துபாயில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், தமிழிலும் அம்மணி பொளந்து கட்டியதால், அடுக்கடுக்காக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

மேலும், கிளாமருக்கு நோ சொல்லமால், 'டிக் டிக் டிக்' படத்தில் பிகினி உடையில் வந்து ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற செய்தார். 

தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல் , ஜகஜால கில்லாடி , பார்ட்டி என மூன்று படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கிறது.

எனினும் இவருடைய டார்கெட், பாலிவுட் கிடையாது. அதையும் மிஞ்சி ஹாலிவுட் படங்களில் நடிப்பது தான். இதற்கான முயற்சிலும் முழுமையாக இறங்கினார். தற்போது இவருடைய கனவு நிறைவேறி உள்ளது. அதாவது, இவர் ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறக்க உள்ளார் நிவேதா. மேலும் வரும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகில் 10 வருடங்களாக கொடிகட்டி பறக்கும் நடிகைகள் கூட, ஹாலிவுட் படங்களில் இன்னும் கால் பாதிக்காத நிலையில்,நான்கே வருடத்தில் நிவேதா பெத்துராஜின் வளர்ச்சி பலரை வாயடைக்க வைத்துள்ளது. என்ன பண்ணுவது இந்த உண்மையை ஜீரணித்து தான் ஆகணும்.