பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யா இருவரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் மனைவி நித்யா கலந்து கொள்வதை அறிந்து, அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் அவரும் கலந்துக்கொண்டு முயற்சி செய்து வருகிறார் பாலாஜி. அவரின் கனவு எந்த அளவிற்கு நிஜமாகும் என்பது சந்தேகம் தான். காரணாம் இனி பாலாஜியுடன் சேர்ந்து வாழவே முடியாது என்ற முடிவில் உறுதியாக உள்ளார் நித்யா. 

அதே போல் பாலாஜியும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வந்திருந்தாலும் அவ்வப்போது அவரைப்பற்றி அனைவரிடமும் குறை கூறிக்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்று, பாடகர் ஆனந்திடம் பாலாஜி பேசிக்கொண்டிருந்த போது, 'கடந்த 8 மதத்திற்கு பிறகு இங்கு தான் நித்தியாவை பார்ப்பதாக தெரிவித்தார். மேலும் இடையில் ஒரு முறை கோர்ட்டில் பார்க்கும் சூழ்நிலை இருந்தது ஆனால் அங்கு மீடியாக்கள் இருந்ததால் நித்யாவை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார். 

அப்படி உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று ஆனந்த் கேள்வி எழுப்பிய போது, தன்னுடைய மனைவியை அசிங்கப்படுத்துவது போல் 'பார்க்கக் கூடாததைப் பார்த்ததாக தெரிவிக்கிறார்' பாலாஜி. 

இதற்கு ஆனந்த், இதற்காக அவரை அடித்தீர்களா... என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாலாஜி இல்லை கண்டித்ததாக தெரிவிக்கிறார். ஆனந்த் பின் ஏன் நித்யா கோர்ட்டுக்கு சென்றார் என கேட்க, எல்லாம் தெரிந்துவிட்டது, அதனால் என்னை அசிங்கப்படுத்த இப்படி செய்ததாக கூறுகிறார். இவர் சொல்வது உண்மையா...? பொய்யா...? கமலின் சாட்டையடி கேள்விகள் பாய்ந்தால் தான் பதில் வெளிவரும்.