‘எங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை சட்டபூர்வமாக அணுகாமல் ஊடகங்களில் வீண் வதந்திகளாகப் பரப்பி மிகவும் கேவலமாக நடந்து வருகிறார் தாடி பாலாஜி’ என்று தன் கணவர் குறித்து மறுபடியும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் அவரது மனைவி நித்யா.

இடையில் சிறிது காலம் அமைதி நிலவிய நடிகர் தாடி பாலாஜியின் வாழ்க்கையில் மீண்டும் அவரது மனைவி ரூபத்திலேயே புயலடிக்க ஆரம்பித்தது. தாடி பாலாஜி தன்னை  ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக அவர் போலீஸில் புகார் செய்தனர். இதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த பாலாஜி  தன் தரப்பு நியாயங்களை சில தினங்களுக்கு  கமிஷனர் அலுவலகத்தில் புகாராகக் கொடுத்தார்.

அப்போது பேசிய அவர், ‘என் குடும்பம் இப்படி மன உளைச்சலுக்கு ஆளானதற்கு முக்கிய காரணம் எஸ்.ஐ. மனோஜ் குமார் என்பவர்தான். குடும்ப நண்பராக அறிமுகமான அவர் பின் என்னுடைய மனைவி நித்தியாவிடம் தவறாகப் பழகத் துவங்கினார். இவர்கள் இருவரும் பேசுவதற்காகவே ஐந்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்துள்ளனர். மேலும் நானோ அல்லது என்னுடைய வழக்கறிஞரோ கூட  நித்தியாவிடம் பேசினாலும் உடனடியாக எஸ்.ஐ.மனோஜ் குமாருக்கு  தெரிந்து விடும். 

அவருடன் சேர்ந்து கொண்டு தான் நித்தியா... பொய் பித்தலாட்டங்கள் செய்து கொண்டு இருக்கிறார். என்மீது பல புகார்களை கூறியபோதும் இதுவரை ஒரு முறை கூட எந்த ஊடகத்திற்கு நான் பேட்டி கொடுத்தது இல்லை. இப்போது இந்த பேட்டி கொடுப்பது கூட என்னுடைய மகளின் நலன் கருதிதான்’’ என்று கூறியிருந்தார்.

தாடி பாலாஜி மனோஜ் குறித்து அவதூறாகப் பேசியது குறித்து சில நாட்கள் மவுனம் காத்த நித்யா தற்போது, ‘என்னுடன் தவறான உறவு வைத்திருப்பதாக பாலாஜி குற்றம் சாட்டும் மனோஜே பாலாஜியின் நண்பர்தான்.  அவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்கள். சொந்த நண்பனை, என்கூட தவறாக அர்த்தப்படுத்திப் பேச பாலாஜிக்கு எப்படி மனசு வந்ததே என்று தெரியவில்லை. எங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை சட்டபூர்வமாக அணுகாமல் ஊடகங்களில் வீண் வதந்திகளாகப் பரப்பி மிகவும் கேவலமாக நடந்து வருகிறார் தாடி பாலாஜி’  என்று கூறியிருக்கிறார்.