அவமானத்துக்கு பயந்து அறந்தாங்கி நிஷா மறைத்து வைத்து இருந்த அதிரடி வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது அதிரடி நகைச்சுவைகளால் புகழ் பெற்றவர் அறந்தாங்கி நிஷா. டி.வி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஆங்காங்கே நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கஜா புயல் கோரதாண்டவம் ஆடியபோது இதவி கேட்டு அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ அவருக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. 

அவருடன் சன் டிவி செய்திவாசிப்பாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான மணிமேகலையுடன் கடலோரப்பகுதிக்கு அறந்தாங்கி நிஷாவும் சென்றுள்ளார். அங்கு உற்சாகமான ஒரு தருணத்தில், மொச்சக்கொட்ட பல்லழகி முத்து முத்து சொல்லழகி படலுக்கு இருவரும் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். அப்போது மிகுந்த உற்சாகமடைந்த அறந்தாங்கி நிஷா, அருகில் இருந்த மரக்கட்டையினாலான இருக்கை மீது ஏறி ஆட முயற்சித்தார். ஆனால் அவரால் பேலன்ஸ் சேய முடியாமல் கீழே விழுந்து விட்டார். 

 

இந்த வீடியோவை அறந்தாங்கி நிஷா வெகு நாட்களாக அவமானம் கருதி மறைத்து வைத்து இருந்ததாகவும், அதனை தற்போது உங்களுக்காக பிரத்யேகமாக வெளியிடுவதாகவும் கூறி மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

இந்த வீடியோவை பார்த்து, அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படி ஒரு உற்சாகம் தேவையா? இதிலென்ன அவமானம் வேண்டிக்கிடக்கிறது என பலரும் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.