சமந்தா, சர்வானந்த் நடிப்பில் சி.பிரேம்குமார் இயக்கத்தில் தெலுங்கில் ரீ மேக் ஆகிவரும் ‘96 படம் தொடர்பாக இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால் அப்படத்தை விட்டே இயக்குநர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘96 படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக்காகிவருகிறது. இதன் கன்னட ரீமேக்கில் கணேஷ், பாவனா நடிக்க, தெலுங்கில் சமந்தா, சர்வானந்த் நடிக்கிறார்கள். தமிழில் இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கு ரீமேக்கையும் இயக்க, தில்ராஜ் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் ஆன நிலையில், தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்தாவுக்குப் பதில் தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரை நியமிக்கலாம் என்று தயாரிப்பாளர் தில்ராஜ் சொல்ல, அதை பிரேம்குமார் ஏற்கவில்லை. தமிழில் பாடல்களும் பின்னணி இசையும் பெரிதாக சிலாகிக்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளரை மாற்றவேண்டிய அவசியமில்லை என்று பிரேம் பிடிவாதம் பிடித்ததாகத் தெரிகிறது.

இதனால் கடுப்பாகிப்போன தயாரிப்பாளர் தில்ராஜ்,’ மியூசிக் டைரக்டரைத்தான மாத்தமாட்ட...உன்னையே தூக்கி அடிக்கிறேன் பார்’ என்று முறுக்கிக்கொண்டு போனதாகவும், பிரேம் அடுத்த சென்னை ட்ரெயின் எத்தனை மணிக்கு என்று புறப்பட தயாராகிக்கொண்டிருப்பதாகவும் தகவல்.