nine films Release in one day which film are you goint to see
நாளை ஒரே நாளில் ஒன்பது படங்கள் வெளியாக உள்ளன.
இந்த வாரம் வெள்ளி அதாவது நாளை “ஆயிரத்தில் இருவர்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘களவு தொழிற்சாலை’, ‘பயமா இருக்கு’, ‘வல்ல தேசம்’, கொஞ்சம் கொஞ்சம், ‘பிச்சுவாக்கத்தி’, ‘தெரு நாய்கள்’, ‘காகாகா’ என ஒன்பது படங்கள் வெளியாகவுள்ளன.
முதலில் 11 படங்கள் வெளிவர இருந்த நிலையில் தற்போது இந்த ஒன்பது படங்கள் மட்டுமே வெளியாகவுள்ளது.
இந்த 9 படங்களும் நாளை வெளியாவதாக விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளன.
அடுத்த வாரம் ‘ஸ்பைடர்’, ‘கருப்பன்’, ‘ஹர ஹர மஹா தேவகி’ என மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. கூடவே மற்ற சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகி போட்டா போட்டி போடும்.
‘ஆயிரத்தில் இருவர்’ படத்தை சரண் இயக்கியுள்ளார்.
ராணா டகுபதி, காஜல் அகர்வால் நடித்துள்ள நான் ஆணையிட்டால், தெலுங்கு டப்பிங் படமாகும்.
