Nikki galrani : நடிகை நிக்கி கல்ராணி கடலுக்கடியில் மீன்களுடன் அழகாக நீந்தும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி 2014 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.நிக்கி கல்ராணி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘இடியட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. 

 South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, அதன்பின் கொஞ்சம் Weight போட்டு தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார்.

தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து வெளியிடும் புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

 இந்நிலையில் நிக்கி கல்ராணி Under water paradise செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இப்படி ஒரு திறமையா என பாராட்டி வருகின்றனர்.

View post on Instagram