குறும்பு, சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா. பாயும் புலி உள்பட தமிழ், தெலுங்கும, கன்னடம், இந்தி, மலையாள மொழி படங்களில் நடித்த பிரபல நடிகை நிகிதா, தொழிலதிபர் ஒருவரை இந்த வார இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரபல தொழிலதிபர் காகன்தீப் அவர்களை நடிகை நிகிதா ஒரு திருமண விழாவில் முதன்முதலாக பார்த்ததாகவும், முதல் பார்வையிலேயே அவரிடம் காதலில் விழுந்ததாகவும் கூறியுள்ள நிகிதா இந்த திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணம் என்று கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பின்னரும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும் நடிகை நிகிதா கூறியுள்ளார்.

வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும் இந்த திருமண விழாவில் நிகிதாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.