Asianet News TamilAsianet News Tamil

அப்பாவுக்கு சினேகா... மகனுக்கு ஹீரோயின் இவரா? தனுஷ் படம் குறித்து வெளியான தகவல்!

நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், 'அசுரன்' மற்றும்  துரைசெந்தில்குமார் இயக்கி வரும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த படம் புதுக்கோட்டை படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்படுகிறதா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு உண்டு. ஆனால் படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கூறவில்லை.

nikigalrani join with dhanush movie ?
Author
Chennai, First Published Jun 6, 2019, 4:35 PM IST

நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், 'அசுரன்' மற்றும்  துரைசெந்தில்குமார் இயக்கி வரும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த படம் புதுக்கோட்டை படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்படுகிறதா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு உண்டு. ஆனால் படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கூறவில்லை.

nikigalrani join with dhanush movie ?

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்தது.  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

nikigalrani join with dhanush movie ?

இந்த படத்தில் நடிகர் தனுஷ், 'கொடி' படத்தை தொடர்ந்து மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அப்பா - மகன் என இரண்டு வித கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்பாவாக நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து வருகிறார்.

nikigalrani join with dhanush movie ?

ஆனால் மகனாக நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்கிற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணியை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios