nikigalrani and prabudeva pair with charlin chaplin 2

நடிகர் பிரபுதேவா திருமணம் என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருபவர் நடிகை நயன்தாராவாகத் தான் இருக்கும். ஆனால் இது அதுபோன்ற திருமணம் இல்லை. சார்லி சாப்ளின் 2 படத்தில் நடக்கப் போகும் கலாட்டா திருமணம்.

இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா தற்போது சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே 2002 ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் தொடர்ச்சியான இந்தப் படத்தில் நடிகை நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் குறித்து இயக்குனர் கூறுகையில், திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பார்கள். பிரபு தேவாவுக்கும், நிக்கி கல்ராணிக்கும் திருமணம் திருப்பதியில் நடைபெறும். அதற்காக அவர்களின் இரு குடும்பங்களும் போகும் போதும், போய் வந்த பிறகும் சந்திக்கும் கலகலப்பான சம்பவங்கள்தான் சார்லி சாப்ளின் 2 படத்தின் கதை என கூறியுள்ளார்.

மேலும் தயாரிப்பாளா் டி.சிவா சொல்லும்போது உலகின் காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழாவாக இவ்வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் இந்தப் படம் உருவாவது சாப்ளினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று கூறினார்.