ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் NGK . இந்த படத்தின் மூலம் முதல் முறையாக நடிகர் சூர்யா மறறும் இயக்குனர் செல்வராகவன் கைகோர்த்தனர்.

இவர்களின் காம்போவிற்கு, தமிழகத்தில் மட்டும் இன்றி, வெளிநாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.  

ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு,  ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது. சில ரசிகர்கள் படம் புரியவில்லை என்றும்,  கூறியிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா NGK படம் வெளியாகி, ஒரு வாரம் ஆகும் நிலையில், இந்த படம் குறித்து ட்விட் ஒன்றை போட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது என்னவென்றால் "#NGK திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். இதற்கு ரசிகர்களும் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.