செல்வராகவன் சூர்யா கூட்டணியின் ‘என்.ஜி.கே’படம் சரித்திரம் காணாத தோல்வியைக் கண்டிருப்பதால் அவரது அடுத்த படமான ‘காப்பான்’ வியாபார ரீதியாக பெரும் பின்னடை சந்தித்திருப்பதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 31ம் தேதியன்று வெளியான சூர்யாவின் ‘என்.ஜி.கே’படம் முதல் நாளே வசூல் டல்லடித்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் அப்படத்தின் நிலைமை இன்னும் மோசமடைந்தது.இதற்கு முன்பு ரிலீஸான விக்னேஷ் சிவன் சூர்யா கூட்டணியின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ முதல் ஓரிரு வாரங்களாவது வசூலில் தாக்குப் பிடித்த நிலையில் என்.ஜி.கே’வின் தடாலடி தோல்வி சூர்யாவின் மார்க்கட்டையே பதம் பார்த்துள்ளது.

இதனால் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’காப்பான்’ படத்தின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் கேரள உரிமையைப் பெற்றிருந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனது முன் பணத்தை திரும்பக் கேட்கத் துவங்க தமிழக விநியோகஸ்தர்கள் பலரும் அதே பாணியில் இறங்க உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.