கடந்த வாரம் முதலே, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில்,  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்  நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஐடி அதிகாரிகள் கூட, நெய்வேலியில் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது, திடீர் என அங்கு சென்று விஜய்யிடம் நேரடியாக சம்மன் கொடுத்து, விசாரணை நடத்தி அவருடைய காரிலேயே அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடந்து ஓரிரு தினங்களே ஆகும் நிலையில், நெய்வேலி  என்.எல்.சி சுரங்கத்தில் மீண்டும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பை நடத்த கூடாது என்றும், அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என பாஜகவினர் நேற்று  மாலை திடீரென குவிந்து போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு உண்டானது. 

இந்த போராட்டம் குறித்து அறிந்த விஜய் ரசிகர்கள்100 க்கும் மேற்பட்டோர், என்எல்சி வாசலில் விஜய்க்கு ஆதரவாக குவிந்து கோஷங்கள் எழுப்ப துவங்கினர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பாஜகவை கண்டித்தும், விஜய்க்கு ஆதரவாகவும் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன்... பரபரப்பு ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து...  விஜய் ரசிகர்களை களைந்து செல்ல மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அறிவுறித்தியுடம் தொடர்ந்து அவர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது லேசான தடி அடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.பின் இயல்பு நிலைக்கு மாறியதும், விஜய் அங்கு வந்து ரசிகர்களுக்கு சிறு புன்னகையும் கை அசைத்த வீடியோ வீடியோ வெளியாகி, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..