Neyantara joins pair with Nivin paul

மலையாள திரை பிரபலத்தின் வாரிசான தயான் ஸ்ரீனிவாசன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நிவின் பாலியுடன் முதன் முறையாக நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.

இயக்குனர் தயான் ஸ்ரீனிவாசன், தனது தந்தை இயக்குனர் ஸ்ரீனிவாசன் மற்றும் சகோதரர் வினீத் ஸ்ரீனிவாசன் பாணியில் திரைத்துறையில் அறிமுகமாக இருக்கிறார்.

இந்தப் படம் ஸ்ரீனிவாசன் இயக்கிய 'வடக்கு நோக்கியந்தரம்' என்ற ஹிட் படத்தில் தற்கால அம்சமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் சலசலக்கின்றன.

இந்தப் படத்தில் “தட்டத்தின் மறையத்து' திரைப்படத்தின் மூலம் மலையாள ரசிகர்களையும், 'பிரேமம்' மூலம் தமிழ் ரசிகர்களையும் கொள்ளை கொண்ட நிவின் பாலி, முதன் முறையாக தென்னிந்திய லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கிறார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இருவரும் திரையில் ஒன்றாக இணைவது ரசிகர்களுக்கு ஆவலைக் கூட்டியுள்ளது.

விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல் வெளியாகும்.