* சூப்பர் ஹீரோ கதையான ‘ஹீரோ’ படத்தில், மித்ரன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது, டீசரில் சிவகார்த்திகேயனுக்கான போர்ஷன் வெகு குறைவாகத்தான் உள்ளது. அதிலும் டயலாக் கிட்டத்தட்ட இல்லவே இல்லை ரகம். இதனால் பட தயாரிப்பு தரப்புக்கும், சிவாக்கும் இடையில் ஏதும் பஞ்சாயத்தோ? என பரபரக்கப்பட்டு வருகிறது.  ஆனால் அதில் அர்ஜுனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதை கவனிக்க

*நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தமிழ் சினிமாவினுள் நுழைகிறார். அருண்விஜய்யின் ‘பாக்ஸார்’, காமெடி நடிகர் ராமர் நடிக்கும் ‘போடா முண்டம்’ ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், பொண்ணு தன்னுடைய செம்ம கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியா மூலமாக அள்ளி வழங்கியுள்ளது ரசிகர் பார்வைக்கு.

*அசுரன் படத்தின் அசுரத்தனமான ஹிட்டுக்கு பின், பல ஹீரோக்கள் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க போட்டி போட்டனர். அசுரனை தெலுங்கு, இந்தி மொழிகளில் இயக்கிட சொல்லியும், அதில் நடிக்க விருப்பமும் தெரிவித்தனர் மாற்று மொழிகளின் மாஸ் ஹீரோக்கள். ஆனால்   வெற்றியோ, காமெடி நடிகர் சூரியை கதையின் நாயகனாக வைத்து ஒரு படத்தை  இயக்க திட்டமிட்டு, வேலையை துவக்கிவிட்டார். 

* கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டர் படம், துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நெல்லை கதைகளத்தை மையமாக வைத்த படங்களை முடித்துவிட்டு அநேகமாக மீண்டும் கெளதம் வாசுதேவ்மேனனுடன் தனுஷ்  இணைவார் என தெரிகிறது. ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படு தோல்வி இருவரையும் பாதித்துவிட்டதாம். தனுஷே இந்த மறு கூட்டணிக்கு அடித்தளம் போட்டாராம் கவுதமிடம். 

*சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் அவரது ஹீரோயின்களில் குஷ்பூவும் ஒருவர். பெரும் இழுபறிக்குப் பின்னரே குஷ் இதில் கமிட் ஆனார். இந்த நிலையில் குஷ்புவின் கணவர் சுந்தர் சி-யையும் உள்ளே இழுத்துவிடும் ஒரு ஐடியாவில் இருக்கிறாராம் சிவா. ரஜினியின் தோழனாக அவருக்கு செம்ம கேரக்டர் ஒன்றும் இருக்கிறதாம். ஆனால் இது நடக்குமா என்பதுதான் டவுட்டு!