Next ajith movie

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான விவேகம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும். 50வது நாள் வெற்றி விழாவையும் கொண்டாடியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கெனவே இயக்குனர் சிவா இயக்கத்தில் மூன்று முறை நடித்துள்ள அஜித் தன்னுடைய நான்காவது படத்தையும் சிவா இயக்கத்திலேயே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது இது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக சிவா அஜித்துக்கென்றே ஒரு போலீஸ் கதையை தயார் செய்துள்ளதாகவும் விரைவில் இந்தப் படம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் சிவா... சிறுத்தை படத்தில் கம்பீரமான போலீஸ் வேடத்தில் நடிகர் கார்த்தியை நடிக்க வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.