நடிகர் ரஜினிகாந்த் பொது நலவாதியா இல்லை சுயநலவாதியா? அவர் அரசியலுக்கு  வந்தால் ஜெயிப்பாரா? அவர் மீதான உங்களின் பிரமிப்பு எப்படி உள்ளது? என்பது உள்ளிட்ட சில ஷார்ப்பான கேள்விகளை வைத்து, தமிழகத்தில் நடத்தப்பட்ட மெகா சர்வே பற்றியும், அதற்கு மக்களின் ரெஸ்பான்ஸ் பற்றியும் வரிசையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். 
அந்த வகையில், ரஜினியின் அண்ணன் சமீபத்தில் சொல்லிவிட்டது போல் ‘2020ல் ரஜினி அரசியல் கட்சி துவங்கிடுவாரா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஐம்பத்து ஐந்து சதவீதம் பேர், அவருக்கு இது வேண்டாத வேலை!ன்னு பதில் சொல்லியிருக்காங்களாம். ‘அரசியலுக்கு வந்தால் ஜெயிப்பார்’ என்று சொன்னவர்களையும் சேர்த்து மொத்த எண்ணிக்கையில் எழுபது சதவீதம் பேர் ‘வந்தால் ஜெயிப்பாரு ஆனால் வர்றது டவுட்டுதான்.’ என்று மதில் மேல் பூனைக்குட்டியாகவே அவரை டீல் பண்ணியிருக்கின்றனர். அதுமட்டுமல்ல...


ரஜினின்னாலே வேகம்!தான். ஆனால் அதற்கு நேருக்கு மாறகா இவ்வளவு வருடங்களையும் கடத்தி, காலி பண்ணிட்டு இப்ப வர்றது என்னாங்க முடிவு! தமிழகத்துக்கு நல்லது பண்றதா இருந்தால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஆளும் போதே வந்திருக்கலாமில்லையா! அவங்க ரெண்டு பேரும் உயிரோடு இருந்து, மாற்றி மாற்றி ஆளும்போது தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறுமா பாய்ஞ்சுது? இப்ப என்னமோ ஸ்டாலின் மற்றும் எடப்பாடியார் காலத்துலதுலதான் தமிழ்நாடு தவிச்சுட்டு கெடக்குதா? சும்மா ஸீன் போட்டுட்டு இருக்கிறார். 


ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் எதிர்த்து நின்று ‘இரண்டும் ஊழல் கட்சிகள்’ அப்படின்னு நெத்தியடியாக பேசி, அவர் தனி கட்சி துவக்கியிருந்தால் ரஜினியை ‘தி பெஸ்ட் லீடர்’ன்னு சொல்லியிருப்போம். ஆனால் ஆளுமையான அவங்க ரெண்டு பேரும்  கெளம்புன பிறகு, வெற்றிடம் இருக்குது, கட்டிடம் இருக்குதுன்னு சொல்றது அசிங்கம். அப்ப வந்திருந்தால், ரஜினியை அவங்க முடக்கி அழிச்சிருப்பாங்கன்னு பயந்திருக்கிறார் போல. ரகுவரனையும், மன்சூர் அலிகானும் ரஜினிக்கு வில்லனாக இருந்து, அவங்களை இவர் அடிச்சால்தான் ரஜினி மாஸ் ஹீரோ! சும்மா யோகிபாபுவையும், கருணாகரனையும் அடிச்சால் ரஜினி வேஸ்ட்டுதானே! அதையேதான் அரசியல்லேயும் அவருக்கு சொல்றோம். 
அப்போ வந்திருந்தா நீங்க பெஸ்ட்டு, இப்ப நீங்க வேஸ்ட்டு!- என்று பொளந்திருக்கிறார்களாம் வெச்சு.