Asianet News TamilAsianet News Tamil

தல அஜித்துக்கு என்னாச்சு!? ராசி எழுத்து இயக்குநருக்கு பெப்பெ காட்டியது ஏன்?

அசுரன் படம்  இயக்குநர் வெற்றிமாறனை இந்தியாவின் எல்லா மாநில சினிமாவினருக்கும் அறிமுகப்படுத்திவிட்டது. எங்கோ போய் நிற்கிறார் மனிதர். தமிழ் உட்பட பல மாநில முக்கிய ஹீரோக்கள் அவரோடு படம் செய்ய ஆசைப்பட, அவரோ அஜித்தை தேடிப்பிடித்து ஒரு கதை சொல்ல ரொம்பவே மெனெக்கெட்டிருக்கிறார். ஆனால் தல தரப்பிலிருந்து சந்தோஷமான பதில் இல்லையாம். 

news about ajith
Author
Tamil Nadu, First Published Nov 22, 2019, 6:27 PM IST

*    சுந்தர் சி யின் படங்களிலேயே பெரிய பட்ஜெட் படமாக எடுக்கப்பட்டது ‘ஆக்‌ஷன்’. ரிலீஸுக்கு முன்பு படத்தை பற்றி தாறுமாறாக பில்ட் அப் கொடுத்தார் சுந்தர். ஆனால் பப்படம் ஆகிவிட்டது இப்படம். இதனால் விஷால் மற்றும் சுந்தர் மீது கட்டுப்பாடில்லாத காண்டில் இருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன். 

*    அமர்க்களமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் -2 ஷுட் துவங்கும் முன்பே ஸ்டாப் ஆனது. கிட்டத்தட்ட டிராப்பிங் லெவலுக்கு போய் பின் ஷங்கரின் விடா முயற்சியால் உயிர்பெற்றது. கிட்டத்தட்ட  இரண்டு ஷெட்யூல்கள் சென்னை, ராஜமுந்திரி மற்றும் புனேவில் முடிந்தன. இதே வேகத்தோடு படத்தை கொண்டு செல்லலாம் என்று நினைத்திருந்தார் ஷங்கர். ஆனால் அதற்குள் தன் பிறந்தநாள் தொடர் கொண்டாட்டங்களில் பிஸியான கமல், அடுத்து டாக்டர் பட்டம் வாங்கப்போகிறேன் என்று ஒடிஸா போனார். சரி போன மச்சான் திரும்பி வருவார் என்று ஷங்கர் ஏங்கி நிற்க, இப்போது காலில் அறுவை சிகிச்சைக்காக ரெஸ்ட்டுக்கு போய்விட்டார். 
வேறு வழியில்லாமல் கமல் இல்லாத ஸீன்களை இப்போது நிதானமாக சுட்டுக் கொண்டிருக்கிறார் ஷங்கர். 

*    தொடர் தோல்விகள். ஆனாலும் பிரமாதமாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. சினிமாவில் மட்டுமில்லை, சினிமா தொடர்பான நிகழ்வுகளிலும்தான். கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வான ‘உங்கள் நான்’ நிகழ்வின் போது கமல் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து ஓப்பனாகவே சான்ஸ் கேட்டு அசத்திவிட்டார்  மனிதர். 
இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் ஓப்பன் மேடையில் நயன் தாராவிடம் வழிந்து அதன் பின் அவரது ஆதர்ஸ நாயகனாகவே ஆனவர்தான் வி.சே.

*    இயக்குநர் அட்லீக்கும், பா.ஜ.க.வுக்கும் எப்போதுமே ஆகாது. தமிழில் விஜய்யை வைத்து தான் எடுக்கும் படங்களில் இந்துத்வத்தை லேசாக உரசிவிட்டு, படத்தின் பப்ளிசிட்டியை பற்ற வைப்பார். இந்த நிலையில் ஷாரூக்கை வைத்து தான் எடுக்கும் படத்துக்கு ‘சங்கி’ என்று பெயர் வைத்துள்ளார். 
இது ஒன்று போதாதா படத்தின் பப்ளிக்குட்டி எகிறி அடிக்க?இந்தியில் இந்த படம் என்னாகுமோ ஆனால் தமிழில் நிச்சயம் ஹிட்டு. 

*    அசுரன் படம்  இயக்குநர் வெற்றிமாறனை இந்தியாவின் எல்லா மாநில சினிமாவினருக்கும் அறிமுகப்படுத்திவிட்டது. எங்கோ போய் நிற்கிறார் மனிதர். தமிழ் உட்பட பல மாநில முக்கிய ஹீரோக்கள் அவரோடு படம் செய்ய ஆசைப்பட, அவரோ அஜித்தை தேடிப்பிடித்து ஒரு கதை சொல்ல ரொம்பவே மெனெக்கெட்டிருக்கிறார். ஆனால் தல தரப்பிலிருந்து சந்தோஷமான பதில் இல்லையாம். 
(தல...நல்லா கவனிங்க, வெற்றிமாறன் பெயரோட முதல் எழுத்து ‘வி’. அப்படியிருந்தும் வேண்டாமுன்னு சொல்லிட்டீங்களா?)

Follow Us:
Download App:
  • android
  • ios