New technologies to shake up all of you - 2

உலகின் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்தது ‘அவதார்’ படம்தான். இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். ரூ.15 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது பிஸியாகவுள்ளார் கேம்ரூன்.

‘அவதார்’ இரண்டாம் பாகத்தில் பல புதுமைகளை புகுத்த ஜேம்ஸ் கேமரூன் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறாராம்.

இரண்டாம் பாகத்தில் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எல்லோரையும் அதிர வைக்க காத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

அது என்னவெனில், 3-டி கண்ணாடி அணியாமலேயே படத்தை 3-டியில் பார்க்கும் ஒரு சிறப்பு டெக்னாலஜியை இந்த படத்தில் இவர் அறிமுகப்படுத்தவுள்ளேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

விரைவில் நம் அனைவரையும் அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுபோகும் அவதார் – 2-ஐ எதிர்ப்பார்த்து உலக சினிமா ரசிகர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.