Asianet News TamilAsianet News Tamil

"இந்த படத்துல அவர் வேற மாதிரி போலீஸ்".. சரத் மற்றும் அமிதாஷ் நடிப்பில் பரம்பொருள் - டீசர் வெளியானது!

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் தனுஷின் விஐபி படத்தில் வில்லனாக நடித்திருந்த அமிதாஸ் பிரதன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

New movie paramporul teaser out now starring sarathkumar and amithash
Author
First Published Jul 14, 2023, 7:03 PM IST

கவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சி. அரவிந்தராஜ் இயக்கத்தில், இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜாவின் இசையில் புதிதாக உருவாக்கி உள்ள திரைப்படம் தான் பரம்பொருள். தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் தனுஷின் விஐபி படத்தில் வில்லனாக நடித்திருந்த அமிதாஸ் பிரதன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். வெளியாகி உள்ள டீசரை பொருத்தவரை இந்த திரைப்படம் சிலை கடத்தல் தொடர்பான ஒரு திரைப்படமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் அண்மையில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான "போர் தொழில்" திரைப்படத்தில் வருவது போல இந்த திரைப்படத்தில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இல்லாமல் சற்று மாறுபட்ட வேடத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

கடத்தப்படும் சிலைகளை போலீசார் மீட்கும் பொழுது அவற்றை ஆய்வு செய்யும் அதிகாரியாக அமிதாஸ் பிரதன் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கு இடையே நடக்கும் சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையே இந்த திரைப்படத்தின் திரைக்கதையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios