Asianet News TamilAsianet News Tamil

மலையாள ஸ்டாருடன் கைகோர்த்துள்ள ராம்; பிரபல இசையமைப்பாளரின் படத்தளத்தில் தொடரும் படப்பிடிப்பு

மலையாள ஸ்டார்  நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தை தொடர்ந்து சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

new movie of thangka meengal ram
Author
Chennai, First Published Nov 8, 2021, 2:56 PM IST

பிரபல இயக்குனர் ராம் உருவாக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு  ஜீவாவின் மாறுபட்ட தோற்றத்தில் வெளியான கற்றது தமிழ் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து 2013-ல் இவர் இயக்கி நடித்த தங்க மீன்கள் மிடில் கிளாஸ் தந்தையை முழுவதுமாக பிரதிபலித்த படமாக வெற்றி கண்டிருந்தது. பின்னர் தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியதோடு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் ராம். இவர் தற்போது மலையாள புகழ் நிவின் பாலி நடித்து வரும் புதிய தமிழ் படத்தை இயக்கி வருகிறார். 

new movie of thangka meengal ram

இந்த படம் நிவின் பாலி நாயகனாக நடிக்கும் இரண்டாவது தமிழ் படமாகும். இதற்கு முன்பு கடந்த 2013 ல் அல்போன்சு புத்ரன்  யத்தில் தமிழ், மலையாளம் என் இரு மொழிகளில் வெளியான நேரம் படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்திருந்தார். ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்து கொடுத்திருந்த நேரம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராமுடன் நிவின் பாலி கைகோர்த்துள்ளார். அஞ்சலி நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ள இந்த புதிய படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் இசையில் உருவாகும் இதற்கு ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், காலை இயக்குனராக உமேஷ்  ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி புரிந்து வருகின்றனர்.

new movie of thangka meengal ram

இதுவரை பெயர் வைக்கப்படாத இந்த புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்றதை தொடர்ந்து அடுத்த கட்டமாக சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய செட் அமைத்து நடைபெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios