பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் க/பெ ரணசிங்கம் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது. 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்து. ஜீ பிளக்ஸ் என்பது கட்டண முறையில் படம் பார்ப்பதற்காக ஜீ குழுமம் உருவாக்கியுள்ள நிறுவனம். ஓடிடி-யில் ஓராண்டு சந்தா செலுத்திவிட்டால் அதில் வெளியாகும் அனைத்து படங்களையும் இலவசமாக பார்க்கலாம். ஆனால் ஜீ பிளக்ஸ் தளத்தில் ஒரு படத்தை ஒரு முறை பார்க்க குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அந்த முறையில் முதல் தமிழ் படமாக க/பெ ரணசிங்கம் வெளியாக உள்ளது. 

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?... நிறைமாத வயிறுடன் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்...!

இந்த படத்தை ஒரு முறை நீங்கள் ஜீ பிளக்ஸில் பார்க்க 199 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். காலை முதலே இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றனர். ட்விட்டரிலும் #KaPaeRanasingam என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இப்படி கட்டணமாக செலுத்திவிட்டு புக் செய்தோம் என்றால் அந்த படத்தை அடுத்த 6 மணி நேரத்திற்குள் நீங்கள் பார்த்துவிட வேண்டும். அப்படி இன்டர்நெட் பிரச்சனை, பவர் கட் என ஏதாவது சிக்கல் காரணமாக நீங்கள் படத்தை 6 மணி நேரத்திற்குள் பார்க்கவில்லை என்றால் அதுக்கு நீங்கள் தான் பொறுப்பு மீண்டும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே படத்தை பார்க்க இயலும். இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.