மறைந்த இயக்குனர் பாலுமஹிந்திராவிடம் பாராட்டுகளை பெற்ற "பேச்சி" குறும்படத்தை முழுநீள திரைப்படமாக இயக்க உள்ளார் ராமச்சந்திரன்.  

மறைந்த இயக்குனர் பாலுமஹிந்திராவிடம் பாராட்டுகளை பெற்ற "பேச்சி" குறும்படத்தை முழுநீள திரைப்படமாக இயக்க உள்ளார் ராமச்சந்திரன். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தை படக்குழு அடர்ந்த காடுகள் கொண்ட வன பகுதிகளில் படமாக்கவுள்ளது. 30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக வன பகுதிகளில் படக்குழுவினர் படமாக்கவுள்ளனர். இதுவரை வந்த ஹாரர் படங்களிலிருந்து இது வேறுபட்ட படைப்பாக இருக்கும். இப்படத்துக்காக i பில்லி , சூனியம் பற்றி மிக நுணுக்கமாக அதிக நாட்கள் செலவழித்து ஆராய்ச்சி செய்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர். இது ரசிகர்களுக்கு புதுமையான அட்வெஞ்சர் ட்ரீட்டாக இருக்கும் என நம்பிக்கையோடு கூறுகின்றனர் படக்குழுவினர்.

வெயிலோன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஆர். பரந்தாமன் , விக்னேஷ் செல்வராஜன் , விஜய் கந்தசாமி தயாரிக்கும் இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு பார்த்திபன் , கலை குமார் கங்கப்பன் , படத்தொகுப்பு இக்னேஷியஸ் அஸ்வின்.