பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த தொடர்ந்து மூன்று நாட்களாக புதிய பிரபலங்களை உள்ளே இறக்கி வருகின்றனர் நிகழ்ச்சியாளர்கள்.

நேற்றைய முன் தினம் தான், நடிகை சுஜா வருணி வந்தார். அதனை தொடர்ந்து நேற்றைய தினம் புதுமுக நடிகர் ஹரிஷ் கல்யாண் உள்ளே வந்தார். இதையடுத்து இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை காஜல் வருகை தருகிறார்.

இவர் ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி நடத்திய நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குடித்து விட்டு நடனமாடியதாக கூறப்பட்டதால் வெளியேற்றப்பட்டவர்.

இவரின் வருகை கண்டிப்பாக காயத்ரிக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.