ஒரு நாள் கூத்து படதில் தமிழ் சினிமாவில் அறிமுகம் கொடுத்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இவர் தற்போது ஜெயம் ரவி, உதயநிதி ஆகியோர் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தன் வாழ்க்கையில் சந்தித்த காதல் குறித்து மனம் திறந்துள்ளார், அவர் கூறுகையில் நான் ‘துபாயில் இருந்த போது பல இளைஞர்கள் எனக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்கள், ஆனால் அதை நான் வாங்கியதில்லை .
அதே போல் சிலர் என்னுடைய போன் நம்பரும் கேட்பார்கள், நான் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு முறை வெளியில் சென்றபோது ஒருவரை கண்டதாகவும் அவரிடம் சென்று நம்பரை நானே வாங்கினேன், ஆனால், வாங்கியதோடு சரி, பேசவே இல்லை, தூக்கி எறிந்துவிட்டேன்’ என கூறியுள்ளார்.
