வாணி ராணி சீரியலுக்கு பிறகு ராதிகா நடிக்கவிருக்கும் சீரியல் தான் சந்திரகுமாரி. வாணி ராணிக்கு பிறகு ராஜா ராணி காலத்து கதையை தேர்ந்தெடுத்து நடிக்கவிருக்கும் ராதிகா இந்த சீரியலில் முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த சீரியலையும் ராதிகாவின் ராடன் நிறுவனம் தான் தயாரிக்கவிருக்கிறது.  இந்த சந்திரகுமாரி சீரியலில் தன்னுடைய புதிய தோற்றம் என்ன என்பதை ராதிகா சமீபத்தில் , தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் புதிய தோற்றத்தில் விரைவில் மீண்டும் சின்னத்திரைக்கு வர இருப்பதையும் அவர் அதில் தெரிவித்திருக்கிறார். 

ராதிகாவின் இந்த புதிய தோற்றம் , ரம்யா கிருஷ்ணன் பாகுபலியில் செய்திருந்த சிவகாமி தேவி கதாபாத்திரத்தையே நினைவூட்டுகிறது. பாகுபலியில் ரம்யா கிருஷ்ணனின் இடத்தில் வேறு யாரையுமே ஒப்பிட்டு பார்க்க முடியாது. அந்த அளவிற்கு மிரட்டலாக, தோரணையாக நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். 

அதனாலேயோ என்னவோ ராதிகாவின் இந்த புதிய தோற்றத்தினை, பாகுபலி சிவகாமி தேவியுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஃபஸ்ட்லுக் எப்படி இருந்தால் என்ன சீரியல் நல்லா இருந்தா சரி என சந்திரகுமாரி சீரியலை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் வாணி ராணி ரசிகர்கள்.