நயன்தாரா நடித்து முடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நயன்தாரா நடித்து முடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழில் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையும், கதையின் நாயகியாகவும் நடிப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார். அந்த வகையில் 'நெற்றிக்கண்' திரைப்படத்தை... அவரது காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், தற்போது, ரிலீஸ் குறித்த தகவல் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

அதாவது சற்று முன்னர், ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பும், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடித்த, 'மூக்குத்தி' அம்மன் திரைப்படமும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அதை தொடர்ந்து தற்போது இவர் நடித்துள்ள இந்த படமும் ஓடிடியில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது நயன் ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பிரச்சனை காரணமாக, திரையரங்கில் வெளியான திட்டமிட்டிருந்த பல அடங்கல் அடுத்தது ஓடிடி தளத்தில் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. நயன்தாரா கண் தெரியாதவராக நடித்திருக்கும் இப்படம், சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Scroll to load tweet…