பார்த்து சித்தப்பு... இவ்வளவு நெருக்கம் வேண்டாம்... சரவணனை எச்சரிக்கும் நெட்டிசன்கள் ஏன் தெரியுமா?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வனிதாவிற்கு அடுத்து வீட்டிற்குள் கால் வைக்கும் போதே விவகாரத்துடன் வந்தவர் மீரா மிதுன், அழகி போட்டி நடத்துறதா சொல்லி இளம் பெண்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக ஜோ மைக்கேல் என்பவர் புகார் கூற. பிக்பாஸ் வீட்டிற்குள் ஏகப்பட்ட களேபரங்கள், பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறின. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். தமிழ்நாடே வேண்டாம், நான் மும்பைக்கு போறேன்னு போன மீரா மிதுன், பிக்பாஸ் 3-ல் நடந்தது என்ன என்று தினமும் ஒரு வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தார். அந்த வீடியோக்கள் அனைத்தும் டிரால் செய்யப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இந்த  நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களுடன் மீரா மிதுன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் செம ட்ரெண்டிங்கில் இருக்குறது சித்தப்புவும், மீரா மிதுனும் குளோஸ் ஆக இருக்கும் புகைப்படம் தான். அழகாக புடவை கட்டி, தலை நிறைய பூ வைத்து, புன்னகை பொங்க நிற்கும் மீரா மிதுன் பக்கத்துல, செம ஹாப்பிய நின்னு சரவணன் செல்ஃபி எடுத்துருக்காரு. இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் கொந்தளிச்சி போய், சரவணனை சரமாரிய வறுத்தெடுத்துக்கிட்டு இருக்காங்க. 

சித்தப்பு சூதானமா இருங்க இல்லைன்னா சரவணன் ’ஆல்சோ இன்ட்ரஸ்ட் ஆன் மீ’ என மீரா வீடியோ போட போறாங்கன்னும், என்னை கண்ட இடத்துல சரவணன் தொட்டாருன்னு கம்ப்ளைண்ட் பண்ணப் போறாங்கன்னும், சரவணனை எச்சரிக்கும் விதமா நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க. மற்றொரு போட்டோவில் ரித்விகா, தர்ஷன், சரவணன், சாண்டி ஆகியோருடன் மீரா எடுத்துக் கொண்ட புகைப்படமும் செம ட்ரெண்டில இருக்கு. பிக்பாஸ் வீட்டில எல்லா பசங்களும் என் பின்னாடியே சுத்துனாங்கன்னு சொன்ன மீரா, இப்ப எதுக்காக இவங்க கூட இப்படி போட்டோ எடுக்கனும், இதுல இருந்து மீரா ஒரு ஃபிராடுங்கிறது தெரியுதுன்னு சரமாரியான கமெண்ட்கள் வந்த வண்ணம் இருக்கு.