தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நடிகையான ஸ்ரீரெட்டி, கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமானவர். படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தார். தன்னை பல நடிகர்கள் படுக்கைக்கு அழைத்தனர் என ஸ்ரீரெட்டி கூறிய பட்டியலில், இயக்குநர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என நீளமான பட்டியலை வெளியிட்டு அதிரடி கிளப்பினார். பட வாய்ப்பிற்காக இப்படி ஸ்ரீரெட்டி தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் என அவரது குற்றச்சாட்டுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சர்ச்சை நாயகியாக வலம் வந்த ஸ்ரீரெட்டி தற்போது கிளுகிளு நாயகியாக மாறி தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். கண் கூசும் அளவிற்கு அரை நிர்வாண புகைப்படங்களை பதிவிடும் ஸ்ரீரெட்டியை நெட்டிசன்கள் மரண பங்கம் செய்தாலும், அம்மணி எதையுமே கண்டு கொள்ளாமல் கடமையாற்றி வருகிறார். 

ஆந்திராவில் இருந்து வந்த இந்த புயல் ஒருபக்கம் இளம் நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், மற்றொரு புறம் செய்யும் காரியங்கள் பார்க்க முடியாத அளவிற்கு படுமோசம்.இதுவரைக்கும் செய்தது எல்லாம் போதாது என்று, தற்போது தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ள புகைப்படம் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, கிஸ் வேணுமா?, ஆனா பிரஷ் பண்ணவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

என்னதான் அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்தாலும், ஏற்கனவே ஸ்ரீரெட்டி மீது கடுப்பில் உள்ள நெட்டிசன்கள் வாய்க்கு வந்த படி தீட்டி வருகின்றனர். சிலரே இந்த மாதிரி எல்லாம் போட்டோ போடாதீங்க, பார்க்குற எங்களதான் ஜெயில்ல போடுவாங்க என கெஞ்சி கேட்டுள்ளார்.