இந்த சமயத்தில் சுயவிளம்பரத்திற்காக மீரா மிதுன் செய்த காரியத்தை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தள்ளியுள்ளனர். 

மீரா மிதுனுக்கு ஊழல் தடுப்பு ஆணையத்தில், தமிழ்நாடு மாநில இயக்குநர் பதவி கிடைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மீரா மிதுன், அதற்கான அடையாள அட்டையையும் வெளியிட்டிருந்தார். அத்துடன் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து பதிவிட்டிருந்த மீரா, இப்போது ஊழல் தடுப்பு ஆணையத்தில் (ஏ.சி.சி) சென்னை தமிழ்நாடு மாநில இயக்குநராக உள்ளேன். இனிமேல் யாரும் மறைக்க முடியாது, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். விஜய் டி.வி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பேசும் வசனத்தை நக்கலடிப்பது போன்று மீரா மிதுன் போட்ட ட்வீட் ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் தொண்டர்களை கடுப்பேற்றி விட்டது போல் தெரிகிறது.

வழக்கமாக ஓவர் கவர்ச்சியுடன் மீரா மிதுன் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பும். மீரா என்ன செய்தாலும் அதனை மரண பங்கம் செய்வதற்கு என்று நெட்டிசன்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்த சமயத்தில் சுயவிளம்பரத்திற்காக மீரா மிதுன் செய்த காரியத்தை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தள்ளியுள்ளனர். 

Scroll to load tweet…

"குட் போட்டோ ஷாப் வெர்க்", "திருடன் கையில் சாவி கொடுத்த மாதிரி", "தமிழ்நாடு தாங்காதுடா சாமி", "என் இந்த போலி விளம்பரம்" என நெட்டிசன்கள் மீராவை வறுத்தெடுத்து வருகின்றனர். "லெட்டர்ல ஓவர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு, ஒழுங்கா ரெடி பண்ண மாட்டிங்களான்னு" மீரா மிதுனை வச்சி செஞ்சியிருக்காங்க. ஒரு பக்கம் அந்த கடிதத்தில் மீரா மிதுனின் உண்மையான பெயர் தமிழ்செல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் அதை வைத்தும் மீராவை கலாய்த்துள்ளனர். 

Scroll to load tweet…

கூடவே முதல்வன் படத்தில் இது நம்ம லிஸ்டிலியே இல்லையே என மணிவண்ணன் கொடுக்கும் ஷாக் ரியாக்ஸனை வைத்து, மீரா மிதுன் மீம்ஸ் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் "உன்ன பத்தி நீயோ மீம்ஸ் போட்டு, ஷேர் பண்ணிக்குற எதுக்கு இந்த சுய விளம்பரம்" என சரமாரியாக கேள்வி கேட்டிருக்காங்க.