பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே பிரச்சனைகளை தோள் மீது சுமந்து கொண்டு அலைந்தவர் மீரா மிதுன். தொடர் சர்ச்சைகள் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் மீரா மிதுன். அதன் பிறகு சினிமாவில் அவர் ஏற்கனவே புக் ஆகியிருந்த படங்களில் இருந்தும் ஒன்றான் பின் ஒன்றாக நீக்கப்பட்டார். அதன் பின்னர் தனக்கு கோலிவுட் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது, நம்ம ரேஞ்சுக்கு பாலிவுட் தான் சரி என மும்பையில் போய் செட்டிலானார். 

அங்கு போய் சும்மா இருக்காத மீரா, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். மீராவின் அரை நிர்வாண புகைப்படங்களால் கடுப்பாகும் நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் திருந்தாத மீரா, தான் செய்வது மட்டுமே சரி என்பது போல் நடந்துகொள்கிறார். 

தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் தொடை முழுவதும் தெரியும் படியான கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு, படுக்கையறையில் குத்தாட்டம் போடும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனுஷின் "பட்டாஸ்" படத்தில் இருந்து வெளியான "ச்சில் ப்ரோ" பாடலுக்கு மீரா மிதுன் போட்டுள்ள கவர்ச்சி ஆட்டம், நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது. 

 

அரைகுறை ஆடையில் ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போடும் வீடியோவை மீரா மிதுன் வெளியிட்டுள்ளது இது முதல் முறை இல்லை. ஆனாலும் எல்லை மீறிப்போன மீரா மிதுன், படுக்கையறையில் ஆண் நண்பருடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்டதோடு மட்டுமில்லாது, அதனை சோசியல் மீடியாவிலும் ஷேர் செய்திருப்பது தான் பெரும்பாலான நெட்டிசன்களை எரிச்சலடையச் செய்துள்ளது.