அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் புத்தாண்டு என்றும் பாராமல் ஜூலியை கண்டபடி திட்டி வருகின்றனர். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் அனைவரையும் கடுப்பாக்கியது. அதனால் பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்லாது, தமிழக ரசிகர்களிடம் ஜூலிக்கு கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சியது. அப்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மெயின் கன்டன்ட்டாக இருந்தவர் ஜூலி தான். 

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் ஜூலியை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. அவர் என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். 

Scroll to load tweet…

இந்நிலையில் "பிரேமம்" படத்தில் வரும் மலரே பாடல் காட்சியில் நடித்துள்ள ஜூலி, அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் புத்தாண்டு என்றும் பாராமல் ஜூலியை கண்டபடி திட்டி வருகின்றனர்.