நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காததற்கு ரோகினி திரையரங்க நிர்வாகம் கொடுத்த விளக்கத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு டிக்கெட் எடுத்து பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிலருக்கு அந்த தியேட்டர் ஊழியர்கள் அனுமதி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தியேட்டர் நிர்வாத்தினரை எதிர்த்து கேள்வி எழுப்பியதை அடுத்த அந்த நரிக்குறவர் பேமிலியை சற்று தாமதமாக படம் பார்க்க அனுமதித்தது ரோகினி திரையரங்க நிர்வாகம்.

இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலானதை அடுத்து, ரோகினி திரையரங்க நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் வந்திருந்த நரிக்குறவர் குடும்பத்தினருடன் குழந்தைகளும் இருந்ததாகவும், பத்து தல யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் கூறி இருந்தனர்.

இதையும் படியுங்கள்... தீண்டாமை-லாம் இல்லைங்க.. நரிக்குறவர் குடும்பத்தை அனுமதிக்காதது ஏன்? பதறியடித்து விளக்கம் தந்த ரோகினி தியேட்டர்

Scroll to load tweet…

ரோகினி நிர்வாகம் கொடுத்த இந்த புதிரான விளக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் யு/ஏ சான்றிதழுக்கு என்ன விளக்கம் என்பதை பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். யு/ஏ சான்றிதழ் அளிக்கப்படும் படங்களுக்கு 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தனியாக வரக்கூடாது, பெற்றோரின் துணையோடு வந்து பார்க்க முடியும் என்பது தான் விதி. அதை ஒரு காரணம் காட்டியது மழுப்பும் செயல் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலரோ ரோகினி நிர்வாகம் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ரஜினியின் தர்பார் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்ததையும் அப்படத்தை பார்க்க வந்த நடிகர் ரஜினியின் பேரன் லிங்காவுக்கு 10 வயது தான் இருக்கும் அவரை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள். ரஜினி குடும்பத்துக்கு ஒரு சட்டம் நரிக்குறவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேபோல் யு/ஏ சான்றிதழ் பெற்ற படங்களுக்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டதை பலரும் சுட்டிக்காட்டி ரோகினி தியேட்டரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... கலைகள் அனைவருக்கும் சொந்தமானது... நரிக்குறவர்களை தியேட்டரில் தாமதமாக அனுமதித்ததற்கு ஜிவி பிரகாஷ் கண்டனம்