தமிழ் வராதா?... அப்பாவா, பாபுஜின்னு சொன்ன ஸ்ருதி... விளாசி தள்ளும் நெட்டிசன்கள்...!

உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே சோசியல் மீடியாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் கமல் ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து #HBDKamalHaasan, #HappyBirthdayKamalhaasan, #Ulaganayagan, #Kamal60 ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. எல்லாரையும் போல தனது அப்பா கமல் ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது ஒரு குத்தம் என நெட்டிசன்கள் ஸ்ருதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாபுஜி, சினிமாவில் உங்களது 60 ஆண்டு கால உழைப்பை சுட்டிக்காட்டும் சிறப்பான நாள் இன்று. இந்த நாளைக் கொண்டாட இன்று பரமக்குடி செல்கிறோம். உங்களது வாழ்நாளின் மிக முக்கிய நாளில் நாங்களும் பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. லவ் யூ லாட்ஸ் அப்பா என பதிவிட்டுள்ளார். இதில என்ன தப்பு இருக்கு, வாழ்த்து தானே சொல்லி இருக்காருன்னு சொல்ல வர்றீங்களா. அதில தான் சிக்கலே ஆரம்பமாகுது. உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் பல வித்தியாசமான சொற்களை கூட அழகாக கையாண்டு புதுக்கவிதைகள் படைக்க கூடியவர். அப்பேர்பட்ட கமல் பெண்ணு, அப்பாவை பாபுஜின்னு குறிப்பிட்டது தான் சர்ச்சைக்கு காரணம்.  

ஸ்ருதி ஹாசன் உடைய டுவிட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள், அழகாக அப்பா என்று கூப்பிடாம, அது என்ன  பாபுஜின்னு கேள்வி எழுப்பியிருக்காங்க. அப்பா தமிழில் புகுந்து விளையாடுவார், பெண்ணுக்கு தமிழ் வராது போல என நெட்டிசன்கள் ஸ்ருதியை விளாசியிருக்காங்க. என்ன தான் விமர்சனம் எழுந்தாலும் சின்ன வயசில இருந்தே ஸ்ருதியும், அக்சராவும் கமலை பாபுஜின்னு கூப்பிட்டு தான் பழக்கமாம். அதனால் தான் ஸ்ருதி தனது டுவிட்டர் பதிவில் பாபுஜின்னு குறிப்பிட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. என்னதான் ஒத்த வார்த்தையால் சர்ச்சை எழுந்தாலும், பிறந்தநாளின் போது அப்பாவுடன் ஸ்ருதி, அக்சரா எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.