அண்மையில் ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் பார்த்திபனுக்கு (Parthiban) கோல்டன் விசா வழங்கியது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். 

ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் கோல்டன் விசா (Golden Visa) என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. தங்களுடைய துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கௌரவத்தை கொடுத்து வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். 

இந்த விசாவுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் ஐக்கிய சிட்டிசன்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள். இந்த விசா ஒவ்வொருவருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

மலையாள நடிகர் நடிகைகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோருக்கு இந்த விசா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த விசாவை பெற்ற முதல் நடிகர் பார்த்திபன் தான். அண்மையில் அவருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

இந்த விஷயம் மீம் கிரியேட்டர்களுக்கு கண்டெண்டாக அமைந்துள்ளது. ஏனெனில் சேரன் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான வெற்றிக்கொடிகட்டு படத்தில் துபாய்க்கு வேலைக்கு செல்வதற்காக விசா வாங்க பணம் கட்டி ஏமாந்திருப்பார் பார்த்திபன். அதை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு விதவிதமாக மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக துபாய் குறுக்கு சந்தில் வாழ்ந்து கஷ்டப்பட்ட உங்களுக்கு ஒரு வழியா விசா கிடைச்சிருச்சு வாழ்த்துக்கள் என்றும், ஒரு காலத்துல ஆனந்தராஜ் கிட்ட துபாய் விசாக்கு 1 லட்சம் கொடுத்து ஏமாந்தாரு. இப்போ எப்படியோ வாங்கியாச்சு என வெற்றிக்கொடிகட்டு பட புகைப்படத்துடன் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…