இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான "பிக்பாஸ்" நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிற்குள் பட்டாம்பூச்சி போல சுற்றி வந்த லாஸ்லியா வெகு விரைவிலேயே அனைவரையும் கவர ஆரம்பித்தார். சாக்‌ஷி உடன் கடலை போட்டுக் கொண்டிருந்த கவினை, வளைத்து வளைத்து பேசி வலையில் விழ வைத்தார் லாஸ்லியா. உருகி, உருகி காதலித்த கவின், லாஸ்லியாவைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் ஆர்மிகளையும், ஃபேன் கிளப்புகளையும் ஆரம்பித்து தூள் கிளப்பினர். 

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த லாஸ்லியாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  அவர்களது காதல் குளத்தில் விழுந்த முதல் கல்லே, தடைக்கல்லாகவும் மாறிப்போனது. அதன் பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இருவரும் இதுவரை ஒருவரை, ஒருவர் சந்திக்கவில்லை. கவின் - லாஸ்லியா காதல் என்ன ஆனது?, இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா? என்பதே இருவரது ஆர்மியின் முக்கிய கேள்வியாக சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. 

இந்நிலையில் முதல் முறையாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்திய லாஸ்லியா. விதவிதமான போஸ்களில் தான் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதைப் பார்த்த ரசிகர்கள்  லாஸ்லியா கோலிவுட்டிற்கு வர உள்ளதற்கான கிரீன் சிக்னல் என ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர். 

லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், நெட்டிசன்கள் சிலர் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.  வடிவேல் காமெடியை வைத்து தயாரிக்கப்பட்டுள்ள அந்த மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முதன் முதலில் லாஸ்லியா நடத்திய போட்டோ ஷூட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருவது கவின் மற்றும் லாஸ்லியா ஆர்மியினரை கொதிப்படையைச் செய்துள்ளது.