மிளகா, முத்துக்கு முத்தாக, நம்ப வீட்டு பிள்ளை, வால்டர் போன்ற பல படங்களில் நடிகராகவும், புலி உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் இருப்பவர் நட்ராஜ், சமீபத்தில் இவர் போட்ட ட்விட் ஒன்றுக்காக அவரை நெட்டிசன்கள் மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.

அப்படி என்ன போட்டார் தெரியுமா?

‘கேள்வியின் நாயகனை கண்டதெல்லாம் கேள்வி கேக்குது.... நாயும் நரியும் பாக்க ஒரே மாதிரி இருக்கும்... நாயா நரியான்னு கண்டு பிடிக்கறது தாண்டா வாழ்க்கை.... சிங்கத்துக்கு பலத்த சோதிக்காத... சோதிக்க கடவுளா இருக்கணும்.... என்று பதிவு செய்திருந்தார்.

இவரின் இந்த பதிவுக்கு தான் நெட்டிசன்கள் மத்தியில் இருந்து... விமர்சங்கள் பறந்தன. இவருடைய ரசிகர்கள் சிலர், இந்த ட்விட்டிற்கான சரியான அர்த்தம் புரியவில்லை என்றும் அவரிடமே கேள்விகளையும் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் நட்ராஜ் தன்னை திட்டி தீர்த்தவர்களுக்கு நன்றி கூறி, புதிய ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.  அதில் "என்னை திட்டி தீர்த்தமைக்கு நன்றி.. எனது பதிவில் யாரையும் தவறாக பேசவில்லை.. என் முகம் தெரியாதோர் என்னை கெட்ட வார்த்தைகளில் பேசுவது அநாகரிகம்.... உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விலகலாம்... உங்கள் நல்ல நோக்கம் தழைத்தோங்க வாழ்த்துக்கள்.. என்று பதிவு செய்துள்ளார்.