Emma sings the Srivalli : எம்மா குரலில் ஸ்ரீவள்ளி..புஷ்பா பாடலை தெலுங்கில் பாடி அசத்தும்..ஆங்கில பாப் பாடகி..புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலை பாடி அசத்திய நெதர்லாந்தை சேர்ந்த பாடகி எம்மா.. ரசிகர்களால் வைரலாக்கப்படும் வீடியோ உள்ளே..

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்த படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டிருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) லாரி டிரைவராகவும், செம்மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் மாஸ் காட்டி இருந்தார். இதுதவிர அனசுயா, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது நடிகை சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் தான். இந்த பாடலுக்காகவே படம் பார்த்தவர்கள் ஏராளம்.

இரண்டு பாகங்களாக தயாராகி உள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த டிசம்பர் 17-ந் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. இப்படம் உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இப்படம் இந்தியில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. அதன்படி இதன் இந்தி டப்பிங் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பிறமொழி படம் ஒன்று இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரூ.100 கோடி வசூலை எட்டுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் முதல்பாகம் இந்தியில் ரூ.117 கோடி வசூலித்தது. தற்போது அதற்கு அடுத்த இடத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா உள்ளது. 

இந்த படத்திலிருந்து நாயகி வர்ணனை பாடலான ஸ்ரீவள்ளி பாடல் ஏகபோக வரவேற்பு பெற்றது.. சமீபத்தில் குழந்தை ஒன்று ஸ்ரீவள்ளி பாடலில் அல்லு அர்ஜுன் போடும் டான்ஸ் மூமென்ட்டை போட்டு அசத்தி இருந்தது.. இந்நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த பாடகி எம்மா.. ஸ்ரீவள்ளி பாடலை தெலுங்கில் பாடி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது..அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..