விஜய் - சூர்யா இணைந்து நடித்த 'ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நேசமணி தலையில் சுத்தி விழும் காமெடி காட்சி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது வைரலாகி வருகிறது.

சாதாரணமாக ஒருவர் ட்விட்டரில் சுத்தியலின் புகைப்படத்தை வெளியிட்டு, நேசமணியின் தலையில் சுத்தி விழுந்து விட்டது என ட்வீட் போட,  அதற்கு வெளி நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் 'pray for nesamani '  என கூறினார். இதைத் தொடர்ந்து பலரும் 'pray for nesamani ' என ட்விட் போட  இது வைரலாக மாறியது.  

இந்த காமெடி காட்சி குறித்து, 'ஃபிரண்ட்ஸ்' படத்தில் நடித்த பிரபலங்கள் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகர் ரமேஷ்கண்ணா, பதினெட்டு வருடங்களுக்கு பின் இந்த காமெடி காட்சி சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நேசமணி தலையில் சுத்தி விழுந்ததற்கான மருத்துவ செலவை, நான் இயக்குனர், விஜய், சூர்யா  என அனைவரும் ஏற்று கொள்கிறோம். விரைவில் சித்தப்பா நேசமணி குணமாகி விடுவார்  என காமெடியாக பதில் கொடுத்தார்.

இதை தொடர்ந்து, இந்தப் படத்தில் எதற்கெடுத்தாலும் எண்ணெயில் கால் வைத்து வழுக்கி விழும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மதன்பாப்  இதுவரை வெளியாகாத தகவலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,  இந்த காட்சி மற்றும் நான் எண்ணெயில் கால் வைத்து வழுக்கி விழும் காட்சியை மட்டும் ஆறு நாட்கள் படமாக்கியதாக கூறியுள்ளார்.  குறிப்பாக இந்த காட்சியின் போது யார் முகத்திலும் சிரிப்பு இருக்கக் கூடாது.  ஆனால் இந்த காட்சி எடுக்க துவங்கியதும் யாரவது ஒருவர் கண்டிப்பாக சிரித்து விடுவார்.

குறிப்பாக வடிவேலுவின் முகபாவனை பார்த்தாலே சிரிப்பு தானாக வரும்.   சிரிப்பை கட்டு படுத்தி காமெடி காட்சியை எடுத்து முடிக்க மட்டும் ஆறு நாட்கள் ஆனதாக கூறியுள்ளார்.