ட்ரெண்டானது  #NerkondapaarvaiTrailer ..! இன்னும் சற்று நேரத்தில் உலகளவில் முதலிடம்..! 

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் மேற்கொண்ட பார்வை. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு படம் என்றால் அது, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படம் என்றே சொல்லலாம். அந்த அளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்தியில் திரைப்படத்தின் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படம் தமிழில் பல்வேறு மாற்றங்களுடன் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வெளியாகிய உடனே தேசிய அளவிலும் உலக அளவிலும் ட்ரெண்டாகி உள்ளது.

அதன்படி  #NerkondapaarvaiTrailer என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 2 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சற்று நேரத்தில் முதல் இடத்தை பிடிக்க உள்ளது அஜித்தின் #NerkondapaarvaiTrailer என்ற ஹேஸ்டேக். அஜித் ரசிகர்களுக்கு இப்போதே பெரும் கொண்டாட்டமாக உள்ளது இந்த விஷயம். இதற்கு இடையில் இன்று மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியாக உள்ளதால் இன்னும் எத்தனை கோடி பார்வையாளர்களை பெற போகிறதோ என்ற ஆவல் இப்போதே எழ தொடங்கி உள்ளது