பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலன்,  முதல் முறையாக தமிழில் அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலன், முதல் முறையாக தமிழில் அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படம் பாலிவுட் திரையுலகில் வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். 

ஒருசில சீன்களில் மட்டுமே இவர் வந்தாலும், இவருடைய கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வித்யா பாலன். தற்போது முதல் முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்த இப்படம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தயாரிப்பாளர் போனி கபூருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும், தமிழில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தில் தனக்கு சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அது தனக்கு மிகவும் சிறப்பானது என முதல் முறையாக இப்படம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.