தல அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'நேர் கொண்ட பார்வை'. இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம், 10 ஆம் தேதி, வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான, இந்த படத்தின் டிரைலர் மற்றும் சிங்கிள் பாடலான 'வானில் இருள்' என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இன்று மாலை 6.45 மணிக்கு நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள EDM பாடல் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, இந்த பாடலை எப்படி வைரலாக்குவது என இப்போதே தயாராகி விட்டனர் அஜித் ரசிகர்கள். 

நேற்றைய தினம் விஜய் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'வெறித்தனம்' என்கிற பாடலை பாட உள்ளார் என்கிற தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், இன்றைய தினம் அஜித் பட பாடலை அல்டிமேட்டாக வரவேற்க உள்ளனர் தல ரசிகர்கள்.