தமிழ் சினிமாவில், கடந்த சில வருடங்களாகவே சின்னத்திரையில் இருந்து சென்று ஹீரோக்கள் உருவாகி வருகிறார்கள். உதாரணத்திற்கு காமெடி நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்து கொண்டு, நடிகராக மாறி, இன்று முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் சிவகார்த்திகேயன், மற்றும்  சந்தானம், ஆகியோர்.

அவர்களை தொடர்ந்து ரியோ ராஜ், கவின் ஆகியோரும் கடந்த ஆண்டு ஹீரோவாக அறிமுகமாகினர். இந்நிலையில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத ஒரு நபர் தற்போது ஹீரோவாக மாறியுள்ளார். 

அவர் வேறு யாரும் அல்ல, விஜய் டிவி தொலைக்காட்சியில் 'நீயா நானா' நிகழ்ச்சியை பரபரப்பு குறையாமல் தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர் கோபிநாத் தான்.  இவர் 'இது எல்லாத்துக்கும் மேல' என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இந்தப் படத்தை இயக்குனர் பாரதி கணேஷ் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகை சிம்ரன் நடித்துள்ள 'கண்ணுபடபோகுதய்யா' படத்தை இயக்கியவர். 'இது எல்லாத்துக்கும் மேல'  படம் முழுக்க நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

கோபிநாத் இந்த படத்திற்கு முன்பு 'நிமிர்ந்து நில்' படத்தில் செய்தியாளராகவும்,  'திருநாள்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளது இவரின் அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.